News August 16, 2024

கோவைக்கு இனி HAPPYதான்

image

கோவை மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார். 2019இல் இத்திட்டத்திற்கு அப்போதைய முதல்வர் இபிஎஸ் ரூ.1,652 கோடி ஒதுக்கி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ஆட்சி மாறிய நிலையில் நாளை தொடங்கப்பட உள்ள நிலையில் இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 14, 2025

கோவை: மனைவியை கத்தியால் குத்திய கணவர்!

image

கோவை: கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் , தனது மனைவி பிரியதர்ஷினி மீது நடத்தையில் சந்தேகம் கொண்டதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக, நேற்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோபிநாத், பிரியதர்ஷினியை கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து கவுண்டம்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கோபிநாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 13, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (13.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 13, 2025

கோவை: ரூ.85,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

image

கோவை மக்களே, SBI பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E. / B. Tech. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.85,920 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அக்.02ம் தேதிக்குள் இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!