News December 31, 2025
கோவைக்கு இனி இவர் தான்!

70 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், பதவி உயர்வு அளித்தும் தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. அதன்படி கோவை சிட்டி போலீஸ் கமிஷனராக பதவி வகித்து வந்த சரவணசுந்தர் மேற்கு மண்டல ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கோவை சிட்டி போலீஸ் கமிஷனராக டாக்டர்.கண்ணன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் பொறுப்பேற்பார் என காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Similar News
News January 28, 2026
கோவையில் நாளை முதல் ஜவுளி தொழில் மாநாடு

தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து நடத்தும் ஜவுனி தொழில் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நளை மற்றம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டினை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக துவக்கி வைக்கவுள்ளார். இம்மாநாட்டில் ஜவுளித் தொழிலுக்கென பிரத்யேகமாக கண்காட்சி நடைபெறவுள்ளது.
News January 28, 2026
வால்பாறை அருகே விபத்து: 25 பேர் காயம்

வால்பாறை அருகாமையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் இன்று காலை ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, எஸ்டேட் பகுதியில் இருந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டருடன் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 25 எஸ்டேட் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
News January 28, 2026
கோவை வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று (28-01-2026) மாலை 06:30 மணியளவில், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்கள். இதனை முன்னிட்டு, திமுகவின் மேற்கு மண்டல பொறுப்பாளர் V.செந்தில் பாலாஜி அறிவுறுத்தலின்படி, அவரை வரவேற்க கோவை மாவட்ட திமுக சார்பில், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


