News April 26, 2025
கோவில் வெடி விபத்து – இபிஸ் கண்டனம்!

கஞ்சநாயக்கன்பட்டி கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் கோயில் விழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை, முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலேயே இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது. அலட்சியப் போக்குடன் செயல்படும் திமுக அரசுக்கு எனது கண்டனங்கள் என அவர் தெரிவித்துள்ளார்
Similar News
News April 27, 2025
எர்ணாகுளம்- ஹாட்டியா ரயிலில் கூடுதலாக 2 ஏசி பெட்டி இணைப்பு!

கோவை, ஈரோடு, சேலம் வழியே இயக்கப்படும் எர்ணாகுளம்- ஹாட்டியா
எக்ஸ்பிரஸ் ரயில்கள் (22837/22838) வரும் ஏப்ரல் 28- ஆம் தேதி முதல் கூடுதலாக எக்னாமி ஏசி பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இனிமேல் இந்த ரயில் 19 மூன்றடுக்கு எக்னாமி ஏசி பெட்டிகள், 1 பேன்ட்ரி கார், 2 லக்கேஜ் மற்றும் பிரேக் வேன் பெட்டிகள் என 22 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
News April 26, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காப்பாற்றவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று ஏப்ரல்.26 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள்.
News April 26, 2025
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (26.04.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.