News February 26, 2026
கோவில் நிலங்கள் பொது ஏலம் விட அறிவிப்பு

குலசேகரன்பட்டினம் காஞ்சி விஜய கட்சி கொண்ட பாண்டீஸ்வரர், எழுவரைமுக்கி ஐயப்ப நயினார் சாஸ்தா திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் பொது ஏலம் வரும் மார்ச் மாதம் 5-ம் தேதி காலை 11:30 மணிக்கு ஏலமிடப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 2000 ரூபாய் வைப்பு தொகை செலுத்தி வரை ஓலையாக செலுத்தலாம் என குலசை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 27, 2026
தூத்துக்குடியில் விருப்ப மனு தாக்கல் செய்த அமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட சமுகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் மற்றும் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
News February 27, 2026
தூத்துக்குடி: வாக்காளர்கள் கவனத்திற்கு!

தூத்துக்குடி மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News February 27, 2026
தூத்துக்குடி: குண்டாஸில் கைதான 19 வயது இளைஞர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட சீனி முகம்மது நியாஸ் (19), சந்தோஷ்குமார் (19) ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.மதன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட போலீசார் இருவரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


