News November 11, 2024

கோவில் உண்டியலை உடைத்து சென்றவர் கைது 

image

கடையநல்லூர் கள்ளம்புலி கிராமத்தில் இன்று அதிகாலை அங்குள்ள பூ மாரியம்மன் கோவில் உண்டியலை மர்மநபர் ஒருவர் உடைத்து ஆட்டோவில் தூக்கிச் சென்றார். இதையடுத்து சிசிடிவி கேமரா பதிவை வைத்து சேர்ந்தமரம் காவல்துறை உதவி ஆய்வாளர் தீபன் குமார் தலைமையிலான போலீசார், உண்டியலை திருடிச் சென்ற கரடிகுளம் பகுதியைச் சார்ந்த கருப்பையா என்பவர் மகன் சண்முகம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 11, 2025

தென்காசி மாவட்டத்தில் 2,274 வீடுகள் ஒதுக்கீடு

image

தென்காசி மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25, 2025-26 நிதி ஆண்டுகளில் ஆலங்குளம் 739, கடையம் 192, கடையநல்லூர் 161, கீழப்பாவூர் 209, குருவிகுளம் 216, மேலநீலிதநல்லூர் 209, சங்கரன்கோவில் 170, வாசுதேவநல்லூர் 147, தென்காசி ஒன்றியத்தில் 121, செங்கோட்டை 110 வீடுகள் என மொத்தம் ரூ.70.49 கோடியில் 2,274 வீடுகள் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News December 11, 2025

தென்காசியில் EB கட்டணம் அதிகமா வருதா?

image

தென்காசி மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் <>TANGEDCO <<>>என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News December 11, 2025

SIR பணி.. தென்காசிக்கு சிறப்பு அதிகாரி நியமனம்

image

தமிழக தலை​மை தேர்​தல்​ அ​தி​காரி அர்ச்​ச​னா​ நேற்​று வெளி​யிட்​ட செய்​திக்​குறிப்​பு: வாக்​காளர் பட்டியல்​ சிறப்​பு தீ​விர திருத்தம்​ (எஸ்​ஐஆர்​) 2026 தொடர்​பாக, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான SIR ​பார்​வை​யாளராக மத்​தி​ய சு​கா​தா​ரம்​ -​ குடும்​ப நல அமைச்சகத்​தின்​ இணைச்​செயலர்​ ​விஜய்​ ரெஹ்​ரா​வை தேர்​தல்​ ஆணையம்​ நியமித்துள்ளது.

error: Content is protected !!