News January 20, 2026
கோவில்பட்டி: மாமனாரை சரமாரியாக வெட்டிய மருமகன்

கங்கைகொண்டானை சேர்ந்த உலகநாதன் தனது மகள் செல்வியை(25) கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாப்பாகுடியை சேர்ந்த கருப்பசாமிக்கு(30) திருமணம் செய்து கொடுத்துள்ளார். 4 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக செல்வி தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை உலகநாதன், செல்வி கயத்தாறுக்கு சென்ற போது அங்கு தகராறில் ஈடுபட்ட கருப்பசாமி அரிவாளால் உலகநாதனை வெட்டியதில் அவரது கட்டை விரல் துண்டானது.
Similar News
News January 25, 2026
தூத்துக்குடி: போலீசை அறிவாளால் வெட்ட முயன்ற ரவுடி கைது

தூத்துக்குடி வேலாயுதபுரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் (23) என்பவர் மீது ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் இவர் ரவுடி பட்டியலில் உள்ளார். இந்நிலையில் தாளமுத்து நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ்ஐ முத்துராஜாவை அவர் அறிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பிரவீனை சுற்றி வளைத்த போலீசார் அவரை கைது செய்தனர்.
News January 25, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அந்தந்த பகுதி அரசு அதிகாரிகள் அனைவரும் நேரில் சென்று பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆட்சியர் அன்றைய தினம் பசுவந்தனை கிராம சபையில் கலந்து கொள்ள உள்ளார்.