News October 1, 2025
கோவில்பட்டி: அரிவாளுடன் சுற்றித்திரிந்த இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியில் கார்த்திக் (21), சூரியகுமாரர் (23) ஆகியோர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அப்பகுதியில் சுற்றி திரிந்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்து அரிவாள்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 1, 2025
தூத்துக்குடி மீனவர்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பதிவு செய்த மீனவர்கள், சமூக ஆர்வலர்கள், ஊர் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான தகவலை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News October 1, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும்; ரயில்வே வேலை

தூத்துக்குடி மக்களே; இந்திய ரயில்வேயில் செக்ஷன் கண்ட்ரோலர் பதவியில் 368 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். 20-33 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் இந்த லிங்க் மூலம் வரும் அக்.14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது ரயில்வேயின் முக்கிய பதவி. ரயில்வே நேரம் கண்காணிப்பு, மேனேஜ்மெண்ட், பதிவுகளை பராமரித்தல் போன்றவை . உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்து உதவுங்க.
News October 1, 2025
தூத்துக்குடி: VOTER ID ல இத மாத்தனுமா??

தூத்துக்குடி மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
<
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.