News September 8, 2025
கோவில்பட்டியில் 2 போலீசார் சஸ்பெண்ட்

கோவில்பட்டி போக்குவரத்து காவல் பிரிவு எஸ்ஐ செல்வகுமாரும், அதே பிரிவில் காவலராக உள்ள இந்திரா காந்தியும் நெருங்கி பழகிய நிலையில் கடந்த மாதம் 17 ஆம் தேதி நடுரோட்டில் வைத்து சண்டையிட்டு கொண்டனர். இதனால் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து செல்வக்குமாரை நெல்லை சரக டிஐஜி சஸ்பெண்ட் செய்த நிலையில் தூத்துக்குடி எஸ்பி ஆல்பட் ஜான் இந்திரா காந்தியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News September 9, 2025
கோவில்பட்டி இன்ஸ்பெக்டருக்கு எஸ்.பி பாராட்டு

தமிழ்நாடு அரசு மாவட்ட, மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்து சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
News September 8, 2025
தூத்துக்குடி: 35 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை

தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு. சம்பளம்: 35,000/-. வயது வரம்பு: 21-40 வயது விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு <
News September 8, 2025
தூத்துக்குடியில் இலவசமாக வக்கீல் வேண்டுமா?

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ தூத்துக்குடி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0461-2335111
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.