News April 2, 2025

கோவில்பட்டியில் பைக் மோதியதில் முதியவர் பலி

image

கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (70). இவர் நேற்று  நாலாட்டின்புதூர் அருகே நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த பைக் ஒன்று இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 23, 2025

திருச்செந்தூரில் ரூ.4.07 கோடி வசூல்

image

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணியில் சுமார் ரூ.4.07 கோடி பணம், 1.05 கிலோ தங்கம், 18 கிலோ வெள்ளி, 17 கிலோ பித்தளை, 1218 அயல்நாட்டு நோட்டுகள் என உண்டியல் மூலம் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது என கோவில் அறங்காவலர் அருள்முருகன் தெரிவித்துள்ளார்.

News August 22, 2025

தூத்துக்குடி பெண்கள் ரூ.5000 மானியம் பெற அழைப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தி வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாரத்தை மேம்படுத்த உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் இயந்திரம் வழங்க அதிகபட்சமாக ரூ.5,000 மானியத்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ள பெண்கள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஆக.31 க்குள் விண்ணப்பிக்கலாம். SHARE IT

News August 22, 2025

தூத்துக்குடி: உங்க போன் காணமா? இதை பண்ணுங்க!

image

தூத்துக்குடி மக்களே; உங்க மொபைல் போன் காணாமல் போனாலும் (அ) திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>லிங்கில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் போனை டிரேஸ் செய்து எளிதாக கண்டுபுடிக்கலாம். நம்புங்க! கிட்டத்தட்ட 5 லட்சம் போன் இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க. SHARE பண்ணுங்க

error: Content is protected !!