News February 6, 2025
கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளம் ரூ.50,000 முதல் – ரூ.1,80,000 வரை வழங்கப்படும். வரும் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்
Similar News
News April 21, 2025
தருமபுரியில் வாட்டி வதைக்கும் வெயில்

தருமபுரியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி.. இன்றே கடைசி நாள்

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 ஓட்டுநர், நடத்துனர் காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே <
News April 21, 2025
ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கி கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு

செங்கல்பட்டை சேர்ந்த முருகேசன் திருக்கழுக்குன்றம் கிராம அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த நிலையில் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்த போது ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்புத் துறை மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முருகேசன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஒகேனக்கல் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.