News December 6, 2024
கோலியின் பலவீனம் இது தான்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை எதிர்கொள்ள கோலி சிரமப்படுவதாக சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார். அவரின் பேட்டிங் சராசரி 48 ஆக சரிந்ததற்கு இதுதான் முக்கிய காரணம் என்றும், இதை சரிசெய்ய கோலி முயற்சிக்காமல் இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளில் கோலி தனது விக்கெட்டை தொடர்ந்து பறிகொடுப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 30, 2025
அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி.. திமுக தலைமை அதிர்ச்சி!

NLC தொழிற்சங்க தேர்தல் முடிவு அரசியல் களத்தை அதிர வைத்துள்ளது. மொத்தமுள்ள 6,800 வாக்குகளில் DMKவின் தொமுச 2,507, ADMKவின் அதொமுச 1,389 வாக்குகள் பெற்றன. சிங்கிள் மெஜாரிட்டிக்கான 50% வாக்குகளை (3,183) DMK பெறாததால் பேச்சுவார்த்தைக்கு தகுதியான அங்கீகரிக்கப்பட்ட குழுவுக்கு அதிமுகவும் தேர்வாகியுள்ளது. சாதாரண தொழிற்சங்க தேர்தல் என்றாலும், ADMKவின் வெற்றியால் DMK தலைமை கடும் அதிர்ச்சியில் உள்ளதாம்.
News April 30, 2025
கனடா தேர்தலில் 3 தமிழர்கள் வெற்றி

கனடா நாடாளுமன்ற தேர்தலில் 3 தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒக்வில்லே கிழக்கு தொகுதியில், ஆளும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட சென்னையைச் சேர்ந்த அனிதா வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், ஹரி ஆனந்தசங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகிய ஈழத்தமிழர்களும் வெற்றி பெற்றுள்ளனர். லிபரல் கட்சியின் மார்க் கார்னி மீண்டும் பிரதமரானார்.
News April 30, 2025
ALERT: தினமும் இதை சாப்பிடுகிறீர்களா?

கீழ்காணும் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகம் காலியாகிவிடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதிகப்படியான உப்பு (பரிந்துரைக்கப்பட்ட அளவு 5 கி) சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள கொழுப்பு, பதப்படுத்திகள் மிகவும் கேடுவிளைவிக்கும். குளிர்பானங்கள் சிறுநீரகக் கற்களை ஏற்படுத்துகின்றன. அதீத சிவப்பு இறைச்சி மற்றும் சர்க்கரை சிறுநீரகத்திற்கு எமனாக அமையும்.