News December 22, 2025
கோலாகலமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எங்கு தெரியுமா?

கிறிஸ்துமஸ் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா, கேக், கிறிஸ்துமஸ் மரம், ஸ்டார் ஆகியவைதான். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் சிறப்பாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகை, இந்தியாவிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நம்நாட்டில் எங்கெல்லாம் களைகட்டும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
Similar News
News December 28, 2025
BREAKING: டிச.31-ம் தேதியே கடைசி.. அரசு கடும் எச்சரிக்கை

டிச.31-ம் தேதிக்குள் <<18604204>>பான் கார்டை<<>> ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி 4 மாதங்கள் கடந்த நிலையில், கெடு முடிய இன்னும் 3 நாட்களே மீத உள்ளது. ஒருவேலை நாம் இணைக்க தவறினால் வங்கி சேவை, வருமான வரி, பண பரிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பான் கார்டுடன் ஆதாரை இணைக்க இங்கே <
News December 28, 2025
TOSS: இந்தியா அணி பேட்டிங்

இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. டி20 தொடரை ஏற்கெனவே இந்தியா 3-0 என கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறும் 4-வது டி20 போட்டியில் வெற்றி பெற்று ஆதிக்கத்தை செலுத்த இந்திய அணி முனைப்புடன் உள்ளது. பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் இலங்கை அணி இன்று புதிய வியூகத்துடன் களமிறங்கினால் ஆட்டம் களைகட்டும்.
News December 28, 2025
பொங்கல் பரிசாக ₹5,000 வழங்குக: EPS

பொங்கல் பரிசாக தமிழக மக்களுக்கு ₹5,000 வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், திருப்போரூர் அருகே பரப்புரை மேற்கொண்ட EPS, கடந்த பொங்கல் பண்டிகைக்கு அரசு ₹1 கூட வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினார். வரும் பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு ₹5,000 வழங்க வேண்டும் என தமிழக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். EPS-ன் கருத்து பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?


