News November 28, 2025

கோலமாவு கோகிலா கதையா ரிவால்வர் ரீட்டா?

image

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படம், நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ போன்று உள்ளதாக தகவல்கள் பரவின. இது தனக்கும் முதலில் தோன்றியதாக கீர்த்தி கூறியுள்ளார். இதனால், இப்பட ஷூட்டுக்கு முன்பு மீண்டும் கோலமாவு கோகிலா படத்தை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த படம் ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் என்று விளக்கமளித்தார். இப்படம் இன்று ரிலீஸாகிறது.

Similar News

News December 3, 2025

நெல்லை மக்களே.. இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

image

நெல்லை மக்களே, டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News December 3, 2025

பொங்கல் பரிசு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹5,000?

image

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து, இந்தாண்டு பொங்கலுக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரசு ₹5000 வழங்க இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால், அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், பொங்கலுக்கு ₹5,000 வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ள நயினார், பொங்கல் பரிசுக்காக கூட்டுறவு வங்கிகளை அடமானம் வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

News December 3, 2025

உலகளவில் இமயமலைக்கு கூடும் மவுசு!

image

உலகளவில் டாப் டிரெண்டிங் டெஸ்டினேஷன் பட்டியலில் (2026) இமயமலை முதல் இடத்தை பிடித்துள்ளது. திரில், இயற்கை, கலாசாரம், ஆன்மிகம் என அனைத்தும் கலந்த இடமாக இமயமலை இருப்பதால் டிராவலர்ஸ் இங்கு வருவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு சிட்டிக்கு டூர் செல்ல வேண்டும் என்ற நிலை மாறி, இயற்கை வளமிக்க இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற மனநிலைக்கு டிராவலர்ஸ் வந்திருப்பதை இது காட்டுகிறது. உங்களுக்கு இமயமலை போக ஆசையா?

error: Content is protected !!