News March 26, 2025

கோர விபத்தில் கவிழந்த ஆட்டோ

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மூங்கிலான் (30), ரேவதி(27) தம்பதி. இவர்களது ஒரு வயது மகள் தன்விகா. மூங்கிலான் திண்டிவனத்திலிருந்து ஆட்டோவில் சாரம் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார் ஆட்டோ மீது வேகமாக மோதியது. இதில் ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் வந்த  குழந்தை உட்பட 3 பேரும் படுகாயமடைந்தனர். ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News March 29, 2025

‘பெல்’ நிறுவனத்தில் வேலை; ரூ.84,000 சம்பளம்

image

மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின்(BHEL)பெங்களூர் பிரிவில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள்- 33, வயது வரம்பு: அதிகபட்சம் 32. கல்வி தகுதி: எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ரூமெண்டேசன் ஆகிய பிரிவுகளில் பொறியியல் பட்டப்படிப்பு. திட்ட இன்ஜினியர் பதவிக்கு ரூ.84,000 சம்பளம். இந்த லிங்கை கிளிக் செய்து பதிவு செய்யலாம்

News March 29, 2025

 ஆடு திருடிய வாலிபருக்கு தர்ம அடி

image

விழுப்புரம் மாவட்டம் கிளியனுார் அடுத்த நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார்(50). இவர், ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று வீட்டின் எதிரில் கட்டி வைத்த ஆடுகளை, பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் திருடி செல்ல முயன்றார். பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து கிளியனுார் போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.

News March 29, 2025

ஓடையில் மூழ்கி பெண் பலி

image

விழுப்புரம் பொய்யப்பாக்கம் சோ்ந்தவர் வீரம்மாள் (57). நேற்று பொய்யப்பாக்கம் ஓடைக்குச் சென்றபோது, கால் தவறி உள்ளே விழுந்தாா். நீரில் மூழ்கிய அவா் சம்பவ இடத்திலேயே உரிழந்தார். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் வீரம்மாளின் சடலத்தைக் மீட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!