News March 11, 2025

கோயில் தேரோட்டம்: போக்குவரத்து மாற்றம்

image

காரமடை ரங்கநாதர்கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை (மார்ச்.12) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டுப்பாளையத்திலிருந்து செல்லும் வாகனங்கள் குட்டையூர், காந்தி நகர், தொட்டிபாளையம், ஒன்னிபாளையம், மத்தம்பாளையம் வழியாக கோவை செல்லலாம். கோவையிலிருந்து வரும் வாகனங்கள் மத்தம்பாளையம், ஏழு சுழி, திம்மம்பாளையம், எம்கே புதூர், டீச்சர்ஸ் காலனி வழியாக மேட்டுப்பாளையம் செல்லலாம்.

Similar News

News August 4, 2025

ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம்!

image

கோவையில் நேற்று ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக, கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் இன்று தெரிவித்துள்ளார். மாநகர் பகுதிகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக, மதன் கண்ணன், அறிவழகன், கோபிநாத், அருண் குமார், சுஜி மோகன் ஆகிய 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

News August 4, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

கோவை மாவட்டத்தில் இன்று (04.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 4, 2025

கோவை: ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

image

கோவை மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பனிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 17.08.2025 ஆகும். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!