News June 26, 2024
கோயில் திருவிழாவில் இளைஞர் வெட்டிக்கொலை

சோளிங்கர் அடுத்த கரிக்கன் தாங்கல் கிராமத்தில் கங்கை அம்மன் திருவிழா நேற்று இரவு நடந்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் மற்றும் சிலருக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. தேவராஜ் (30) கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவருக்கு செண்பகம் என்ற மனைவியும், 7 மற்றும் 4 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 2, 2026
ராணிப்பேட்டை: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

ராணிப்பேட்டை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 2, 2026
ராணிப்பேட்டை: EB பில் – ஸ்காலர்ஷிப் வரை இனி whatsapp-ல்!

ராணிப்பேட்டை மக்களே! 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )
News February 2, 2026
ராணிப்பேட்டையில் கரண்ட் கட்; உங்க ஏரியா இருக்கா?

ராணிப்பேட்டையில் உள்ள அரக்கோணம் மற்றும் சிப்காட் துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.3) பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் காலை 9 – 5 மணி வரை ராணிப்பேட்டை நகரம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு. பாரதி நகர், பெரியார் நகர், சிப்காட், சிட்கோ, பெல், புளியந்தாங்கல், அக்ராவரம், அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என செயற் பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


