News August 24, 2024
கோயில் இடத்தில் பதாகை வைத்து மீட்க கோரிக்கை

சின்னசேலத்தில் திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கான சொத்துக்கள் சின்னசேலம் முழுவதும் ஆங்காங்கே இருந்து வருகின்றன. இந்த நிலையில், அம்சா குளம் அருகே உள்ள 70 சென்ட் நிலத்தை தட்டுப்புல் வைப்பதற்கு மானியத்திற்கு விடப்பட்டது. இந்த இடத்தை தற்போது தனிநபர் ஷேக் தாவுத்தான் என்ற பெயரில் பட்டா (5965) என்ற எண்ணில் அரசு அதிகாரிகள் கொடுத்துள்ளனர். இதனை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News March 4, 2026
இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருதுகள் 2025-க்கான விருது

வீரசோழபுரம் பகுதியில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வனத்துறையின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. “இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருதுகள் 2025-க்கான விருது” குயிலி தனியார் தொண்டு நிறுவனத்திற்கு கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News March 4, 2026
2026 மற்றும் 2027 ஆம் ஆண்டிற்கான இலக்கு நிர்ணய கூட்டம்

வீரசோழபுரம் பகுதியில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வனத்துறையின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டிற்கான இலக்கு நிர்ணய கூட்டம் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் (மார்ச்.3) நடைபெற்றது. இதில் மாவட்ட அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News March 3, 2026
கள்ளக்குறிச்சி: நர்ஸ் வேலை வேண்டுமா? ரூ.34,800 சம்பளம்!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு<


