News January 23, 2026

கோயிலில் இருந்து வரும்போது இவற்றை பிறருக்கு தராதீங்க

image

கோயிலில் இருந்து வீட்டுக்கு வரும்போது, இந்த பொருள்களை பிறருக்கு கொடுத்தால், வீட்டிற்கு வரும் தெய்வம் வெளியேறிவிடும் என்பது ஐதிகம். பிரசாதமாக கொடுக்கும் பொருள்கள், அதாவது எலுமிச்சை பழம், பூ, மாலை போன்றவற்றை பிறருக்கு கொடுக்கக் கூடாது. மேலும், கோயிலுக்கு சென்று திரும்பும் போது, யாருக்கும் எந்த தானமும் வழங்கக்கூடாதாம். அதே நேரத்தில், மஞ்சள், குங்குமம், விபூதி போன்றவற்றை பிறருக்கு வழங்கலாம்.

Similar News

News January 30, 2026

அரசு திரைப்பட விருதுகள்… கேள்வி எழுப்பிய பா.ரஞ்சித்

image

2016 – 2022 ஆண்டுகளுக்கான ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா என்ற கேள்வியை SM-ல் மக்களிடம் இயக்குநர் பா. ரஞ்சித் எழுப்பியுள்ளார். திரைப்பட விழாக்களில் வழங்கப்படும் விருதுகளில் பாரபட்சம் உள்ளதாக பரவலாக கூறப்படும் நிலையில் உங்கள் கருத்து என்ன?

News January 30, 2026

BREAKING: கூட்டணி முடிவை சொன்னார் விஜய்

image

தேர்தலை தனியாக எதிர்கொள்ள தயாராகுங்கள் என நிர்வாகிகளிடம் விஜய் வெளிப்படையாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் – TVK கூட்டணியில் இணையலாம் என கூறப்பட்ட நிலையில், இந்த அதிரடி முடிவை விஜய் எடுத்துள்ளதாக தெரிகிறது. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினால் வாக்கு சதவீதம், கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும் என சிலர் ஆலோசனை வழங்கியதாகவும், வேட்பாளர் தேர்வை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

News January 30, 2026

திருப்பதி லட்டு கலப்படம்: ₹250 கோடிக்கு ஊழல்!

image

திருப்பதி லட்டு நெய் கலப்பட வழக்கில், 36 பேர் மீது CBI குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 2021–24 காலகட்டத்தில், 68 லட்சம் கிலோ போலி நெய்யை விநியோகம் செய்து, ₹250 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பால், எண்ணெய்யை பயன்படுத்தாமல் பாமாயில் போன்றவற்றை பயன்படுத்தி போலி நெய் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், 9 TTD அதிகாரிகள் & 5 பால் துறை நிபுணர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

error: Content is protected !!