News September 6, 2025

கோயம்பேடு மெட்ரோ-க்கு வெடிகுண்டு மிரட்டல்

image

கோயம்பேடில், மெட்ரோ ரயில் நிலைய அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று தொலைபேசி வாயிலாக பேசிய மர்மநபர், மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பின், வெடிகுண்டு இல்லை என உறுதியானது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News

News September 6, 2025

JUST IN: திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது

image

சென்னை, நெற்குன்றத்தை சேர்ந்த வரலட்சுமி என்பவர் பேருந்தில் பயணம் செய்த போது 4 சவரன் நகை திருடு போனதாக போலீசாரிடம் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்ததில், திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாரதி மீது 10 திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News September 6, 2025

சென்னை: EEE, B.Sc, B.Tech போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

image

தாட்கோ மூலம் பலதுறைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அவ்வகையில், தற்போது ஜெர்மனி வேலைக்கான பயிற்சியை அறிவித்துள்ளது. இதற்கு B.Sc, EEE, B.Tech IT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க <>கிளிக்<<>> பண்ணுங்க. (நல்ல சம்பளத்தில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News September 6, 2025

சென்னையில் அர்ச்சகர் பயிற்சி சேர்க்கை தொடக்கம்

image

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி2025–2026ஆம் ஆண்டுக்கான ஓராண்டு வைணவ அர்ச்சகர் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. 14 முதல் 24 வயது வரையிலான, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். சேரும் மாணவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் மற்றும் மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆர்வமுள்ளோர் parthasarathy.hrce.tn.gov.i இந்த தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!