News August 19, 2025
கோயம்பேடு- பட்டாபிராம் வரை மெட்ரோ ரயிலுக்கு அனுமதி

தமிழ்நாடு அரசு சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 21.76 கி.மீ நீளமுள்ள கோயம்பேடு–ஆவடி–பட்டாபிராம் பாதைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்தப் பணிக்காக நிலம் கையகப்படுத்தல் மற்றும் உபயோக வசதிகள் மாற்றுதல் செலவுக்காக ₹2,442 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கவுள்ளன. இந்த புதிய வழித்தடம், கோயம்பேட்டிலிருந்து ஆவடி பட்டாபிராம் பகுதிகளை நேரடியாக மெட்ரோ இணைப்பதன் மூலம் போக்குவரத்து எளிமையாகும்.
Similar News
News August 20, 2025
இஸ்ரோ மையத்தில் சென்னை பள்ளி மாணவர்கள்

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு கல்விச் சுற்றுலாவாக இன்று அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சுற்றுலாவில், மாணவர்கள் ராக்கெட் ஏவுதல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை நேரடியாகக் கண்டறிந்து உற்சாகத்துடன் கற்றுக்கொண்டனர். இதன் மூலம் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வம் மேலும் அதிகரித்தது.
News August 19, 2025
சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்தியையொட்டி, சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளையே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், ரசாயன சாயங்கள், பிளாஸ்டிக், தெர்மாகோல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். சிலைகளை அரசால் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும். பொதுமக்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்.
News August 19, 2025
சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.