News November 10, 2025

கோயம்புத்தூரில் இங்கு மின்தடை அறிவிப்பு

image

பெரியநாயக்கன்பாளையம், மருதூர், பவானி பேரேஜ், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், தேவராயபுரம், கவுண்டம்பாளையம், நலம்லாம்பாளையம் பீடர், சாய்பாபா காலனி பீடர், இடையர்பாளையம் பீடர், சேரன்நகர் பீடர், லெனின் நகர் பீடர், சங்கனூர் பீடர் பகுதியில் உள்ள துணை மின்நிலையங்களில் நாளை(நவ.11) மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது . (SHARE)

Similar News

News November 10, 2025

கோவை: 12th,டிப்ளமோ, டிகிரி போதும்! லட்சத்தில் சம்பளம்

image

ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலில் உள்ள குரூப் ஏ, பி (ம) சி பிரிவில் உள்ள பணி வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு ரூ.19,900 முதல் 1,77 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://eapplynow.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவ.26-ம் தேதி கடைசி ஆகும்.

News November 10, 2025

கோவை: பட்டாவில் மாற்றமா? சூப்பர் வசதி

image

கோவையில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது. இதற்கு என்ற https://tamilnilam.tn.gov.in/citizen/ வெப்சைட்டில் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு LOGIN செய்யவேண்டும். ஒரு வாரத்தில் பட்டா ரெடியாகும்.

News November 10, 2025

கோவை மக்களே பயப்புடாதீங்க!

image

கோவை மக்களே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால், ஓட்டுரிமை விட்டு போய்விடுமோ? என்ற பயம் வேண்டாம். erolls.tn.gov.in/blo என்ற இணையதளத்தில் உங்கள் ஏரியாவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளும் அலுவலரின் செல்போன் எண்ணை எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வீட்டுக்கு அலுவலர் எப்போது வருவார் என முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம். (SHARE)

error: Content is protected !!