News December 31, 2025

கோமாவுக்கு சென்ற EX ஆஸி. வீரர்!

image

ஆஸி. அணி முன்னாள் வீரரான டேமியன் மார்ட்டின் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோமாவுக்கு சென்ற நிலையில் உயிருக்கு போராடி வருகிறார். இதனையடுத்து 54 வயதான டேமியன் மீண்டு வரவேண்டும் என பலரும் தெரிவித்து வருகின்றனர். 1999, 2003-ல் ICC WC வென்ற ஆஸி. அணியில் டேமியன் முக்கிய வீரராக இருந்தார். குறிப்பாக 2003 WC பைனலில் இந்தியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்ததை யாராலும் மறக்க முடியாது.

Similar News

News January 6, 2026

ஆஸ்கரில் வரலாற்று சாதனை படைக்குமா Homebound?

image

புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கையை காட்டிய இந்திய திரைப்படமான ‘ஹோம்பவுண்ட்’ உள்ட்பட 15 படங்கள் ஆஸ்கர் விருதுக்கான சர்வதேச திரைப்படப் பிரிவில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இப்பிரிவில் ஆஸ்கர் விருதை எந்த இந்தியத் திரைப்படமும் இதுவரை வென்றதில்லை. இந்நிலையில் 5 படங்கள் மட்டுமே இடம்பெறும் இறுதிப் பட்டியல் ஜன.22-ம் தேதி வெளியாக உள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News January 6, 2026

நீதியை நிலைநாட்டியதால் மகிழ்ச்சி: நயினார்

image

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதித்து, <<18776761>>HC மதுரைக் கிளை<<>> மீண்டும் ஒருமுறை நீதியை நிலைநாட்டியது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தீபத்தூண் என்றும் கோயிலுக்கே உரித்தானது என ஆணித்தரமாக நிலைநாட்டிய கோர்ட்டுக்கு நன்றி என கூறிய அவர், தொடர்ந்து இந்து விரோத விஷத்தை உமிழ்ந்துவரும் திமுக, கோட்டையில் இருந்து துரத்தியடிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

News January 6, 2026

BREAKING: மீண்டும் புயல் அலர்ட்.. கனமழை வெளுக்கும்

image

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளது. இந்நிலையில், ஜன.9-ல் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஜன.10-ல் பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது.

error: Content is protected !!