News December 22, 2024
கோமாரி தடுப்பூசி முகாம் ஜன.3ஆம் தேதிக்கு மாற்றம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,69,200 பசு, எருமை, கன்று போன்ற கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், 6ஆம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி டிச.16ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு நடைபெற இருந்தது. இந்நிலையில், டிச.16ஆம் தேதிக்கு பதிலாக ஜன.3ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 22, 2025
காஞ்சிபுரத்தில் வீட்டு வரி கட்ட அலைய வேண்டாம்!

காஞ்சிபுரம் மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <
News August 22, 2025
காஞ்சிபுரம்: ITI, டிப்ளமோ போதும், சூப்பர் வேலை!

ஆவடியில் உள்ள ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் கீழ் எஞ்சின் தொழிற்சாலையில் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ITI, டிப்ளமோ & இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.18,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். நேர்காணல் செபடம்பர் 15ம் தேதி நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.
News August 22, 2025
காஞ்சிபுரம் ஆட்சியர் புதிய அறிவிப்பு

காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகள் தங்கள் நிறுவனங்களில் பெயர் மாற்றம் உரிமையாளர் பெயர் மாற்றும், பதிவு போன்றவை இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள வேண்டும். இதற்கான ஆலோசனைக் முகாம் வரும் ஆக.23-ம் தேதி சிப்காட் மாம்பாக்கம் மற்றும் திருமுடிவாக்கத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.