News December 24, 2025
கோபி: செங்கோட்டையனை எதிரித்து மனு

கோபி சட்டமன்ற தொகுதியில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் செங்கோட்டையன் போட்டியிடுவார் என்ற சூழலில் சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவரின் அண்ணன் மகன் கே.கே. செல்வன் அதிமுக சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது மேலும் கோபியில் போட்டியிட மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் வி.கே. சி.சிவகுமார் விருப்ப மனுவை வழங்கியுள்ளார்.
Similar News
News December 25, 2025
ஈரோட்டில் அனைவருக்கும் ரூ.30,000 இலவசம்?

2025 ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கப்படும். இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் தொகையைப் பெறுங்கள் முடியாது என வாட்ஸ் ஆப்பில் பொய்யான தகவல் பரவி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்: மேலும் இந்த லிங்கை கிளிக் செய்தால் உடனே உங்களது வாட்ஸ் அப் ஹேக் செய்யப்படும் என எச்சரிக்கை!SHAREit
News December 25, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, காசிபாளையம், சடையாம்பாளையம்,. சூரம்பட்டிவலசு, பச்சப்பாளி, அணைக்கட்டு சாலை, முத்தம்பாளையம், நல்லியம்பாளையம், தெற்குபள்ளம், ரங்கம்பாளையம், பெரியசடையம்பாளையம், கள்ளுக்கடைமேடு, சின்னசடையம்பாளையம், குறிக்காரன்பாளையம், கொல்லம்பாளையம், மூலப்பாளையம், சேனாதிபதிபாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 25, 2025
ஈரோடு: நிலம் வாங்க மானியம்: விண்ணபிப்பது எப்படி?

1).நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2).குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3).2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4).100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5).<
6).மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHAREit


