News December 16, 2025
கோத்தகிரியில் அதிரடி கைது!

கீழ் கோத்தகிரி கெங்கரை மந்தட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர்(48). இவருக்கு 17 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஷீலா(45) என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷீலா தனது 2வது மகனுடன் வாழ்ந்து வந்த நிலையில், சத்திரசேகர் தனது மனைவியை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கிடைத்த புகாரின் பேரில் அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News December 20, 2025
நீலகிரியில் தீவிர தேடுதல் வேட்டை

நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் மாவோஸ்ட் நடமாட்டத்தை கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மசினகுடி பகுதியில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா, நக்சல் தடுப்பு பிரிவுடன் இணைந்து, மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை மேற்கொண்டார். இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட காவலர்கள் கலந்துகொண்டனர்.
News December 20, 2025
நீலகிரியில் யார் அதிகம் தெரியுமா?

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 5,33,076 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2,54,759 பெண் வாக்காளர்கள் 2,78,299 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேர் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 56,091 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 20, 2025
ஊட்டியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் இன்று காலை 9 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி உட்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் 10,+2, டிகிரி முடித்த, வேலை தேடும் நபர்கள் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0423-2444004 மற்றும் 9489026936 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


