News November 9, 2025
கோதுமை விவகாரம்: இபிஎஸ்-க்கு அமைச்சர் பதிலடி

ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என <<18241871>>EPS<<>> வைத்த குற்றச்சாட்டுக்கு, கோதுமை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சக்கரபாணி பதிலளித்துள்ளார். இம்மாதத்திற்கான கோதுமை ஒதுக்கீடு நவ.15-க்குள் ரேசன் கடைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், TN-க்கு அதிக அளவில் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தொடர்ந்து கேட்டு வருவதாகவும், அதை மத்திய அரசு செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 9, 2025
விஜய் + அதிமுக + பாஜக கூட்டணி… முடிவை அறிவித்தார்

NDA-வில் தவெகவை சேர்க்க வேண்டும் என்பதே EPS-ன் எண்ணமாக இருக்கிறது. கூட்டணியில் இருக்கும் தமாகா தலைவர் GK வாசனும் அதே முடிவையே அறிவித்துள்ளார். பொது எதிரியான திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் விஜய் தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அப்படி நடந்தால், 2026 தேர்தலில் திமுகவின் தோல்வி உறுதி என்றும் GK வாசன் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
News November 9, 2025
இந்த நாடுகளில் வாழும் குழந்தைகள் பாவம்!

உலகம் முழுவதும் போர் பிரதேசங்களில் வாழும் குழந்தைகள் எண்ணிக்கை 2024-ல் 4.7 கோடியில் இருந்து அதிகரித்து சுமார் 5.2 கோடியாகிவிட்டது. இதனை ‘Save the Children’ அமைப்பு புதிய அறிக்கையில் கூறியுள்ளது. இது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க.
News November 9, 2025
விஜய் மனிதாபிமானம் உள்ளவரா? துரைமுருகன்

உச்சபட்ச அதிகார மயக்கத்தில் மனிதாபிமானம் இல்லாமல், சட்டசபையில் CM ஸ்டாலின் பேசியதாக விஜய் விமர்சித்ததற்கு, அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். கரூரில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு செல்லாத விஜய் மனிதாபிமானம் உள்ளவர்; நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.


