News April 13, 2024

கோட்டூர்: பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

image

நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக வேட்பாளராக எஸ்ஜிஎம் ரமேஷ் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோட்டூரில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இதில் கோட்டூர் பாஜக ஒன்றிய தலைவர் அரவிந்த் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Similar News

News January 31, 2026

திருவாரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

‘திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை திறன் குறைபாடுடையவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக, இலவச பேருந்து பயண அட்டையினை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’ என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 31, 2026

திருவாரூர்: பொய் புகார் கொடுத்த பெண் கைது

image

திருவாரூர் மாவட்டம், இரவாஞ்சேரியை சேர்ந்தவர் ஹமீதாபைரோஸ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தன்னிடம் இருந்து 25 பவுன் தங்க நகைகளை மர்ம நபர் ஒருவர் வழிப்பறி செய்ததாக இரவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், உறவினர்களிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க மனமில்லாமல் ஹமீதா பொய் புகார் அளித்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

News January 31, 2026

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.30) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!