News April 16, 2025
கோட்டகுப்பத்தில் இலங்கை அகதி விபத்தில் மரணம்

மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த முத்துக்குமார். கோட்டக்குப்பத்தை அடுத்த அனிச்சம்குப்பம் பகுதியில் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அங்கு புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையைக் கடக்க சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து முத்துக்குமார் மீது மோதியதில் உயிரிழந்தார். கோட்டகுப்பம் போலீஸ் வழக்கு பதிவு.
Similar News
News April 21, 2025
விழுப்புரத்தில் எஸ்.ஐ. தேர்வுக்கு இலவச பயிற்சி

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்றுமுதல்(ஏப்.21) சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் அணுகி பதிவு செய்ய வேண்டும் ஷேர் பண்ணுங்க…
News April 21, 2025
அரசு பஸ் மோதி பட்டதாரி வாலிபர் பலி

திண்டிவனம், கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கோபால்(23). இவர், திண்டிவனத்தில் உள்ள பேக்கரியில் பகுதி நேர பணி செய்து வந்தார். நேற்று நான்கு முனை சந்திப்பில் பைக்கில் சென்றபோது, விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில் பஸ்சின் அடியில் பைக்குடன் சிக்கிய கோபால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து திண்டிவனம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 20, 2025
இது இல்லைனா அபராதம் தான்

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் மே. 15 ஆம் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தியுள்ளார். அதன் பின்னர் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள், கடைகள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.