News March 10, 2025
கோடை வெயிலின் தாக்கம் பீர் விற்பனை இருமடங்காக உயர்வு

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 220 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினமும் ரூ.5 கோடி வரை மதுபானங்கள் விற்பனை நடைபெறும். ஆனால் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் டாஸ்மாக் கடைகளில் பிராந்தி, ரம், விஸ்கி போன்ற மதுபானங்கள் விற்பனை சரிந்து பீர் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. மேலும், சில கடைகளில் கூலிங் பீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் மதுபிரியர்கள் புலம்பி வருகின்றனர்.
Similar News
News March 10, 2025
சேலம் வந்த பிரபல இயக்குனர்

சேலம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தில் உள்ள அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயிலில் இன்று (மார்ச்.10) பா.ம.க. பிரமுகர் தமிழ்செல்வன்- சந்திரலேகா ஜோடி திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் பா.ம.க. பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
News March 10, 2025
சேலம் ஆட்சியர் அறிவிப்பு

“அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் தங்கள் வருமானத்தை தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறாமல் அரசின் பாதுகாப்பான, உத்தரவாதமான சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து பயன்பெற வேண்டும். மாநில அளவில் சேலம் மாவட்டம் அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் ரூ.9,101.99 கோடி வசூலித்து தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடம் பெற்று சாதனை” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News March 10, 2025
மார்ச் 21- ல் அஞ்சல் குறைதீர் கூட்டம்!

சேலம் மேற்கு கோட்ட அஞ்சலகத்தில் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம், வரும் மார்ச் 21- ஆம் தேதி மதியம் 03.00 மணிக்கு நடக்க உள்ளது. புகார்களை ‘அஞ்சல் கண்காணிப்பாளர், மேற்கு கோட்டம், சேலம்-636005’ எனும் முகவரிக்கு வரும் மார்ச் 18- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். சேமிப்பு வங்கி, அஞ்சல் ஆயுள் காப்பீடு, பதிவு தபால், விரைவு தபால் போன்ற சேவை தொடர்பான் புகார்களையும் கடிதத்தில் குறிப்பிட்டு அனுப்பலாம்.