News May 10, 2024

கோடை விழா துவக்கம்

image

உலக புகழ்பெற்ற இயற்கை சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழா களைகட்டுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்தல் கட்டுப்பாடுகளால் கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் உள்ள பூங்காக்களில் எந்த ஒரு நிகழ்வும் நடைபெறவில்லை என்றாலும், இன்று உதகையில் 126வது மலர் கண்காட்சி கோலாகலமாக துவங்கி உள்ளது. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

Similar News

News January 30, 2026

நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் பிப்ரவரி 1ம் தேதி வள்ளலார் ராமலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு, அன்றைய தினம் மதுக்கடைகள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நாளில் மதுபான கடைகள், கிளப் பார்கள், ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடப்படுகிறது. சட்ட விரோதமாக பார்கள் செயல்படும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. மது விற்பனை குறித்து புகார் அளிக்க 0423-2223802.

News January 30, 2026

நீலகிரி: SBI வங்கியில் ரூ.48,480 சம்பளத்தில் வேலை

image

நீலகிரி மக்களே, SBI வங்கியில் 2050 Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த தகுதி வாய்ந்த 21 முதல் 30 வயதுடையவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.48,480 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பக்க கடைசி தேதி 18.02.2026. வங்கி வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க

News January 30, 2026

BREAKING: கோத்தகிரி பெண் உயிரிழப்பு

image

கோத்தகிரி அரவேணுவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதையாத்திரையாக பழனிமலை கோயிலுக்கு நேற்றிரவு மேட்டுப்பாளையம் வழியாக சென்றுள்ளனர். மீனாட்சி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அசுர வேகத்தில் பின்னால் வந்த பைக் மோதியதில் நளினி என்ற பெண் பக்தர் படுகாயமடைந்தார். அவர் மேட்டுப்பாளையம் GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!