News April 27, 2025
கோடை விடுமுறை: நீச்சல் குளத்தில் குவியும் மாணவர்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறையை கழிக்கவும், கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்கவும், மாணவர்கள் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் குவிந்து வருகின்றனர். இந்த நீச்சல் குளத்தில், நீச்சல் கற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் பயிற்சி முகாம் கடந்த 1ஆம் தேதி முதல் தொடங்கியது. இதனால் காலை முதல் மாலை வரை கூட்டம் அலைமோதி வருகிறது.
Similar News
News August 24, 2025
திருவள்ளூர்: ரேஷன் கார்டுதாரர்கள் இத நோட் பண்ணிக்கோங்க

திருவள்ளூர் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News August 24, 2025
விவசாயிகள் நலம் காக்கும் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டறங்கில் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் மு பிரதாப் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தோட்டக்கலைத்துறை, வேளாண் துறை, மின் துறை மற்றும் இதர துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். விவசாயிகளின் குறைகளை மனுவாக நேரடியாக தெரிவித்து பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
News August 24, 2025
மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாயை சேர்ந்த 80 வயது மூதாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டில் குடியிருந்த வட மாநில வாலிபர்கள் மூதாட்டியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மூதாட்டியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்க முயன்றனர். இந்த நிலையில் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தார் வரும் சத்தத்தை கேட்டு வட மாநில வாலிபர்கள் தப்பி ஓடியுள்ளார்.