News April 6, 2025
கோடையை இதமாக்கும் மண் பானை குடிநீர்!

கோடை காலத்தில் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட நீரை அருந்துவதால் தலைவலி, சளி, இருமல், தொண்டை வலி, மலச்சிக்கல் மற்றும் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதிலிருந்து விடுபட மண்பானையில் வைக்கப்படும் நீரை அருந்தலாம். இதன் மூலம் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். மேலும் இதில் உள்ள தாதுகள் ஜீரண சக்தியை அதிகரிக்கும் என மருத்துவர் தனபால் தெரிவித்துள்ளார். இதை ஷேர் செய்யுங்கள்.
Similar News
News April 8, 2025
தமிழக முதல்வருக்கு நாமக்கல் எம்பி நன்றி

நாமக்கல் மாவட்டம்மோகனூர் ஆண்டாபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டி உள்பட இரண்டு குழந்தைகள் மின் விபத்தில் உயிரிழந்த பரிதாப நிலையில் நேற்று உயிரிழந்தவுடன் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிதியுதவி கேட்ட நிலையில் தமிழக முதல்வர் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு லட்சம் அறிவித்துள்ளார்.நிதி உதவி அறிவித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நாமக்கல் எம்.பி.மாதேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.
News April 8, 2025
நாமக்கலில் தங்கம் சவரனுக்கு 480 குறைவு!

நாமக்கல் நகர நகை வியாபாரிகள் சங்கம் நிர்ணயித்த இன்றைய (08.04.2025) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.480 குறைவு ஒரு கிராம் விலை ரூ.8,225-க்கும், ஆபரண தங்கம் 1 பவுன் ரூ.65,800-க்கும், முத்திரை காசு 1 பவுன் ரூ. 66,400-க்கும், முத்திரை காசு 1 கிராம் ரூ.8300-க்கும், விற்பனை வெள்ளி ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனையாகிறது.
News April 8, 2025
நாமக்கல்: உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி

மோகனூர் ஆண்டியாபுரம் செல்வம் மனைவி இளஞ்சியம் தனது பேரக்குழந்தைகள் ஐவி (வயது 3), சுஜீத் (வயது 5) ஆகியோர் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது நேற்று எதிர்பாராத விதமாக மூவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அவர்களுக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.