News April 4, 2025
கோடைக்காலம் முடியும் வரை.. அதிகாரிகள் அறிவுறுத்தல்!

கோடைக் காலம் முடியும் வரை கால்நடைகளுக்கு தினமும் சோடா உப்புகளை கொடுக்க வேண்டும். கறவை மாட்டிற்கும் நாள் ஒன்றுக்கு, 70 லிட்டருக்கு மேல் தண்ணீர் தர வேண்டும். தீவனத்தில் தேவையான அளவு எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் உயிர்ச்சத்துக்கள் சேர்ப்பதன் மூலமும், வெப்ப அயற்சியின் தாக்கம் மற்றும் உற்பத்தி குறை வினை தவிர்க்கலாம் என சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் தெரிவித்தார்.
Similar News
News April 10, 2025
கடித்து குதறிய தெரு நாய்கள்: 20 பேர் காயம்

எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெரு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாய் கடியால் காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
News April 10, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு!

பண்டிகைகள், விடுமுறையை முன்னிட்டு, ஏப்ரல் 11- ஆம் தேதி முதல் வரும் மே 04- ஆம் தேதி வரை வாரத்தில் வெள்ளிக்கிழமையில் தாம்பரத்தில் இருந்து போத்தனூருக்கும், ஞாயிற்றுக்கிழமைதோறும் போத்தனூரில் இருந்து தாம்பரத்திற்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் (06185/06186) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News April 10, 2025
சேலத்தில் கேஸ் சிலிண்டர் விலை ரூ.886.50 ஆக உயர்வு!

நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ரூபாய் 50 உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 886.50 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் கடும் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளனர்.