News April 9, 2025
கோடி நலம் தரும் தஞ்சை கோடியம்மன் ஆலயம்

தஞ்சை – திருவையாறு செல்லும் வழியில் இந்த கோடியம்மன் ஆலயம் உள்ளது. இங்குள்ள அம்மன் கோடி அவதாரம் எடுத்து அரக்கர்களை வதம் செய்ததால் இந்த அம்மனுக்கு கோடியம்மன் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. திருமண தடை, மகப்பேறு கிடைக்க பெண்கள் வழிபடுகின்றனர். மேலும் இந்த அம்மனை வணங்கினால் கண் திருஷ்டி, பணக் கஷ்டம் போன்ற அனைத்தும் நீங்கும் என கூறுகின்றனர். இதை SHARE செய்யவும்.
Similar News
News April 17, 2025
தஞ்சை: வராக ஜெயந்திக்கு இதை மறக்காதீங்க

இரண்யாட்சன் என்ற அசுரனிடம் இருந்த இந்த பூமியை பூமியை காக்க விஷ்ணு பகவான் எடுத்த மூன்றாவது அவதாரம் தான் வராக அவதாரம். நாளை வராக ஜெயந்தி திதி வர உள்ளது. இந்த நாளில் வராகரை வழிபட்டால் பெயர், புகழ், அந்தஸ்து, ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வரியம் இவை எல்லாம் ஒரு சேர கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இல்லையெனில் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். உங்கள் உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
News April 17, 2025
தஞ்சை: நிலுவை மனுக்கள் குறித்து ஆலோசனை கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் இன்று (17.04.2024) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் தஞ்சாவூர் வருகையின் போது மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகள், மக்களுடன் முதல்வர் முகாம்களில் பெறப்பட்ட நிலுவை மனுக்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
News April 17, 2025
தஞ்சை: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து கொள்முதல்

தஞ்சை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாக நடப்பு 2025-26-ம் ஆண்டில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உளுந்து மற்றும் பச்சைப்பயறு நன்கு சுத்தம் செய்து எடுத்துவர வேண்டும். ஈரப்பதம் 12% க்குள் இருக்குமாறு உலர வைத்து, மற்ற பொருட்கள் கலப்பின்றி விவசாயிகள் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.