News February 28, 2025
கோடநாடு வழக்கு மூவரிடம் விசாரணை

கோடநாடு வழக்கில் தொடர்புடைய கணினி ஆப்ரேட்டர் தினேஷ் தற்கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். தற்கொலை வழக்கு தனி வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சங்கரன், சுரேஷ், கபீர் ஆகிய மூவருக்கு சம்மன் அனுப்பி நேற்று விசாரணை நடைபெற்றது. டிஎஸ்பி அண்ணாதுரை மூவரிடமும் விசாரணை நடத்தினார்.
Similar News
News August 21, 2025
நீலகிரியில் இலவச Tally பயிற்சி!

நீலகிரியில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GSTபயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க <
News August 21, 2025
நீலகிரி: தனியார் வேலை வாய்ப்பு முகாம்

நீலகிரி, ஊட்டியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக நாளை பிங்கர் போஸ்டில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு, பட்டதாரிகள், ஐடிஐ கணினி இயக்குபவர்கள், ஓட்டுனர்கள் என அனைத்து விதமான தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 21, 2025
நீலகிரி காவலர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா தலைமையில் இன்று காவலர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டமானது நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எடுத்துக் கூறினார்.