News May 22, 2024
கொள்ளையடித்த நகைகளை கோவில் முன்பு வைத்து சென்ற திருடர்கள்

சூளகிரி அருகே அத்தி முகாம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் கடந்த 16ம் தேதி இரவு வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் கொள்ளையர்கள் தாங்கள் திருடிய பொருட்களை கோவில் முன்பு இன்று அதிகாலை வைத்து விட்டு சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
Similar News
News April 20, 2025
கிருஷ்ணகிரி நண்பனை அடித்து நகையை பறித்த நண்பர்கள்

கிருஷ்ணகிரி அடுத்த செம்படமுத்தூரை சேர்ந்தவர் சின்னப்பையன்(32). கடந்த மார்ச் மாதம் இவருடைய நண்பர்களான மாரியப்பன், சண்முகம் ஆகியோருடன் சேர்ந்த மது அருந்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் இருவரும் சேர்ந்த சின்னப்பையனை தாக்கி 2 1/2 பவுன் செயினை பறித்து தப்பினர். இதுகுறித்த புகாரில் கிருஷ்ணகிரி போலீசாரி இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். *நண்பர்களே ஆனாலும் கவனமாக இருங்கள்*
News April 19, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை இரவு நேர ரோந்து பணி

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 19.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
News April 19, 2025
உலக காதலர்களை சேர்க்கும் கிருஷ்ணகிரி ரோஜா

கிருஷ்ணகிரி மாவட்டம் ரோஜா சாகுபடிக்கு புகழ் பெற்ற மாவட்டமாகும். தேன்கனிக்கோட்டை, தளி, பாகலூர் போன்ற பகுதிகளில் ரோஜாக்கள் பயிரிடப்படுகின்றன. இங்கிருந்து ரோஜாக்கள் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தின சமயத்தில் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் தனித்துவம் கருதியே இதற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. ஷேர் பண்ணுங்க