News October 26, 2024

கொள்ளிடம்: தண்ணீரில் மூழ்கி கூலித் தொழிலாளி பலி

image

கொள்ளிடம் அருகே சின்ன ஓதவந்தான்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜான்(65). கூலித் தொழிலாளியான இவர் இன்று புதுமணியாற்றில் உள்ள கதவணையில் தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் எதிர்பாராத விதமாக ஜான் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 22, 2026

மயிலாடுதுறை: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News January 22, 2026

மயிலாடுதுறை: மருத்துவமனையை திறந்து வைத்த முதல்வர்

image

சீர்காழியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் புதிதாக கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூகம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் குத்து விளக்கேற்றி நிழ்கவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News January 22, 2026

மயிலாடுதுறை: ATM-யில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

image

மயிலாடுதுறை மக்களே ATM-யில் பணம் எடுக்கும் போது, பணம் வரமாலே பணம் எடுத்ததாக உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வருகிறதா? கவலைவேண்டாம். அதற்கான ரசித்து இருந்தாலே போதும், அருகில் உள்ள உங்களது வாங்கி கிளைக்கு சென்று புகாரளிக்கலாம். பின்னர் நீங்கள் புகாரளித்த அடுத்த 5 வேலை நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அப்படி தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.100 சேர்த்து அளிக்கப்படும். SHARE IT.

error: Content is protected !!