News December 14, 2024
கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 13ஆம் தேதி மாலை 117.57 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் ஆற்றில் சுமார் 35 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது படிப்படியாக நீர்வரத்திற்கு ஏற்ப சுமார் 60,000 கன அடி வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. எனவே கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 6, 2026
மயிலாடுதுறையில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்.6) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட 5ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்ற மாற்றுத்திறனாளிகள் தங்கள் சான்றிதழ்களுடன் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News March 6, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 5, 2026
மயிலாடுதுறை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
2. Toll Free: 1800 4252 441
3. சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
4. உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க!


