News October 25, 2024

கொள்முதல் விலை உயர்வால் முட்டை விலை உயர்ந்தது

image

ஈரோடு, சித்தூர், நாமக்கல் வட்டாரத்தில் உள்ள பண்ணைகளில் கொள்முதல் செய்யப்படும் முட்டை, காஞ்சிபுரத்தில் உள்ள மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் விற்கப்படுகிறது. கடந்த மாதம் காஞ்சிபுரத்தில் 1 முட்டை விலை 5 ரூபாய் 30 காசாக இருந்தது. இந்நிலையில், பண்ணைகளில் கொள்முதல் விலை உயர்வு காரணமாக, முட்டை ஒன்றுக்கு 70 காசுகள் உயர்ந்து, நேற்று ஒரு முட்டை 6 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஷேர் பண்ணுங்க

Similar News

News January 23, 2026

காஞ்சிபுரம் பக்தர்களுக்கு இனிப்பான செய்தி!

image

காஞ்சிபுரம் காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 யானைகளை பீடத்திடமே திரும்ப ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து வனத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட். யானைகளின் உடல்நிலை குறித்த அறிக்கையை ஆய்வு செய்த பிறகு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே வனத்துறை கொண்டு செல்லப்பட்ட 3 யானைகளை விரைவில் திரும்பும் என எதிர்பார்ப்பு.

News January 23, 2026

ஸ்ரீபெரும்புதூர்: சம்பள பாக்கியால் தற்கொலை முயற்சி!

image

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே வெங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரமேஷ், சம்பள பாக்கி தராததால் நேற்று(ஜன.22) மாலை மதுபோதையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். அவர், அதே பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், ரமேஷிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

News January 23, 2026

BREAKING: காஞ்சியில் கனமழை வெளுக்கும்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.23) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களுக்கான சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோர்ட் ஆகியவற்றை எடுத்து செல்லவும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!