News October 30, 2025
கொளத்தூர் அருகே விபத்து – ஒருவர் பலி

கொளத்தூர் அருகே அய்யம்புதூர் பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி அய்யந்துரை (65) டிராக்டரில் பயணம் செய்தபோது வால்கிணத்தூர் அருகே சரக்கு வாகனத்துடன் மோதியதில் நேற்று சம்பவ இடத்திலேயே பலியானார். டிராக்டரில் இருந்த சேகர், முனுசாமி ஆகியோர் லேசாக காயமடைந்து மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொளத்தூர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 30, 2025
சேலம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News October 30, 2025
சேலம் மத்திய குற்ற பிரிவு அலுவலகம் இடமாற்றம்

சேலம் டவுன் காவல் நிலைய வளாகத்தில் மத்திய குற்ற பிரிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது. 160 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகம் கட்டப்பட்டது. பழமையான கட்டிடம் எனவும் அதனை இடிக்க கூடாது என தெரிவித்தனர். மழைக்காலம் என்பதால் அதிக அளவில் தண்ணீர் உள்ளே வருகிறது. இதனை அறிந்த கமிஷனர் ஐந்து ரோடு பகுதிக்கு மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் மாற்றி உத்தரவிட்டார்.
News October 30, 2025
சேலம்: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை!

சேலம் அரசுப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஊரகத் திறனாய்வுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த தொகை மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இதற்கு www.dge.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.


