News January 25, 2025
கொலை வழக்கு: 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சேலம், மேட்டூரைச் சேர்ந்த ரஞ்சித் குமார் கடந்த 2014ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ராமு, சுரேஷ்குமார், பாலாஜி, சிவகுமார் முருகன், தினேஷ் ஆகிய ஆறு பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில் மேட்டூர் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று கொலையாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உதய வேளவன் உத்தரவிட்டார்.
Similar News
News September 10, 2025
சேலம்: மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம் கிழக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (செப்.10) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சேலம் உடையாப்பட்டி, காமராஜர் நகர் காலனி பகுதியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிழக்கு கோட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு!

ரயில்வே மேம்பால பராமரிப்பு பணிகள் காரணமாக, செப்.11-ல் கோவை- லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் (11014), எர்ணாகுளம்-டாடாநகர் தினசரி எக்ஸ்பிரஸ் (18190), ஆழப்புலா-தன்பாத் தினசரி எக்ஸ்பிரஸ் (13352), எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12678) ஆகிய ரயில்கள் மாற்றுப்பாதையில் அதாவது ஈரோடு-சேலம் ரயில் பாதையில் இயக்கப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News September 9, 2025
சேலம் வழியாக செல்லும் வாராந்திர ரயில் நீட்டிப்பு!

சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி- இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (07355), இராமநாதபுரம்-ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (07356) ஆகிய ரயில் சேவைகள் வரும் அக்டோபர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.