News September 20, 2025
கொலை வழக்கு: இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு பகுதியைச் சேர்ந்த சாதிக்பாஷா என்பவரை முன்பகை காரணமாக கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி கொலை செய்த வழக்கில், விக்கிரவாண்டி தாலுக்கா கலித்திராம்பட்டு பகுதியைச் சேர்ந்த பாரதி என்கிற பாரதிதாசனை, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 16, 2025
விழுப்புரம்: டிகிரி போதும், விமானப்படையில் வேலை!

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் <
News November 16, 2025
விழுப்புரம்: இன்றைய இறைச்சி விலை நிலவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவம்பர் 16) கோழி, ஆட்டு இறைச்சி மற்றும் மீன் விலைகள் உயர்ந்துள்ளன. பல சந்தைகளில் விலை மாறுபாடும் ஏற்பட்டுள்ளது. கோழி இறைச்சி ஒரு கிலோவிற்கு ரூ.210 முதல் ரூ.250 வரையிலும், ஆட்டு இறைச்சி ரூ.800 முதல் ரூ.950 வரையிலும் விற்பனையாகிறது. மீன் சந்தையில் சாதாரண மீன்கள் ரூ.150 முதல் ரூ.250 வரையிலும், தரமான மீன்கள் ரூ.600 முதல் ரூ.800 வரையிலும் விற்கப்படுகின்றன.
News November 16, 2025
விழுப்புரம்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <


