News March 21, 2025
கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் நிலத்தகறாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ராஜேஷ் என்பவரை கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த தேவராஜ், மனோஜ் குமார், விஜயகுமார் ஆகிய மூன்று பேருக்கு ஓசூர் மாவட்ட அமர்வு கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 25,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
Similar News
News March 28, 2025
கந்திகுப்பம் அருகே டிரான்ஸ்பார்மரில் 40 கிலோ காப்பர் வயர் திருட்டு

பர்கூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே சிந்தகம்பள்ளி பக்கமுள்ளது எட்டிகுட்டை. இந்த ஊரில் மின்சார டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. கடந்த 24ந் தேதி இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் டிரான்ஸ்பார்மரில் இருந்த 40 கிலோ காப்பர் வயர்களை திருடிச் சென்றனர். அதன் மதிப்பு ரூ.35 ஆயிரம் ஆகும்.
அது குறித்து வரட்டனப்பள்ளி தாண்டவன்பள்ளம் மின் வாரிய இளநிலை பொறியாளர் சுப்பிரமணி கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார்
News March 27, 2025
கிருஷ்ணகிரியில் சிறிய இங்கிலாந்து

கிருஷ்ணகிரியில் அமைந்துள்ளது இந்த தளி தோட்டம். இது கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் இதமான வானிலை நிலவுகிறது. இது இங்கிலாந்தின் தட்பவெப்ப நிலையை ஒத்திருப்பதால் ‘சிறிய இங்கிலாந்து’ என்று பிரிட்டிஷார் பெயர் சூட்டினார். இந்த காலநிலை காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவற்றை பயிரிடுவதற்கு ஏற்றதாக அமைவதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு ஆண்டு முழுவதும் வருகிறார்கள். ஷேர் செய்யுங்கள்.
News March 27, 2025
வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனி வியாபாரிகள், வணிகா்கள் தா்ப்பூசணி, மாம்பழம், வாழைப்பழம் போன்ற கனிகளை செயற்கை வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்யக் கூடாது. கனிகளை விற்பனை செய்வோர் சட்ட விதிகளைப் பின்பற்றி உணவு வணிகத்தில் பதிவு அல்லது உரிமம் பெற்று காய்கனிகளை விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் எச்சரித்துள்ளார்.