News April 18, 2025
கொலை வழக்கில் முக்கிய பெண் குற்றவாளி கைது

நெல்லை, டவுன் தொட்டி பாலத்தெருவைச் சேர்ந்த முன்னாள் காவல் உதவி அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலி கடந்த மாதம் 18-ம் தேதி இடப்பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான நூர்நிஷா என்பவர் தலைமறைவாக இருந்தார். நேற்று (ஏப்.17) மேலப்பாளையத்தில் நெல்லை தனிப்படையினர் நூர்நிஷாவை கைது செய்தனர். அவர் நெல்லைக்கு அழைத்து வரப்படுகிறார்.
Similar News
News April 19, 2025
திருநெல்வேலியில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்

▶️மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி
▶️களக்காடு முண்டந்துறை சரணாலயம்
▶️பாபநாசம் அகஸ்தியர் அருவி
▶️மாஞ்சோலை
▶️நெல்லை வனவிலங்கு சரணாலயம்
▶️காரையார் அணை
▶️நெல்லையப்பர் கோயில்
▶️பனதீர்த்தம் அருவி
News April 19, 2025
நெல்லையில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

திருநெல்வேலியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் ஜூனியர் சாப்ட்வேர் டெவலப்பர் பிரிவில் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இங்கே <
News April 19, 2025
இன்ஸ்டாவில் பிரச்சனை ஏற்படும் விதமாக பதிவிட்ட 4 பேர் கைது

மானூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட எட்டான்குளம், தெற்கு தெருவை சேர்ந்த கோகுல்(24), முத்து(20), சுடலைமுத்து(18), அந்தோணி ராஜ் (23) ஆகிய 4 பேரும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ மற்றும் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் புகைப்படத்தை பதிவு செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் இன்று 4 பேரை கைது செய்தனர்.