News March 11, 2025
கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி சரண்

நாகர்கோவிலில் மளிகை கடை வியாபாரி வேலுவை கல்லால் தாக்கி, எரித்துக் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான தோவாளை திருமலாபுரம் பகுதி சேர்ந்த சிவனேஷ் -ஐ போலீசார் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். ஆனால் குற்றவாளி எங்கு தலைமறைவாகி இருக்கிறார் என தெரியாமல் இருந்து வந்த நிலையில், நேற்று நாகர்கோவில் ஜே.எம் கோர்ட்டில் நீதிபதி முன்பு சரணடைந்தார்.
Similar News
News March 11, 2025
குமரியில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டி தீர்க்கும் மழை

பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது, இந்நிலையில் இன்று இரவு 10 மணி வரை குமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்.
News March 11, 2025
கனமழையால் வனப்பகுதிக்கு செல்ல தடை விதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. மாவட்ட ஆட்சியரும் இன்று பொதுமக்களுக்கு அறிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று காளிகேசம் சுற்றி உள்ள மலை பகுதியில் அதிகமான மழை பெய்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா தலமான காளிகேசம் செல்ல பொதுமக்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
News March 11, 2025
குமரி TO காஷ்மீர் ரயில் சேவை – ரயில்வே திட்டம்

தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு நேரடி ரயில் கிடையாது. சாலை மார்க்கமோ, விமானம் மூலமாகவோதான் செல்ல முடியும். இந்த குறையை போக்க கன்னியாகுமரி (அ) ராமேஸ்வரத்தில் இருந்து காஷ்மீருக்கு 4,000 கி.மீ. தூரம், அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவையைத் தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஏப்ரலில் இந்த ரயில் விடப்படவுள்ளதாக தகவல். இது வெற்றி பெறும் நிலையில் குமரி – ஜம்மு காஷ்மீர் ரயில் இயக்கப்படும். SHARE IT.