News March 28, 2025

கொலை வழக்கில் சிக்கிய திருவாரூர் நபர்

image

சிதம்பரம் அம்மாபேட்டையில் நேற்று முன்தினம் இரவு, ஒரு வீட்டில் திருட முயன்றபோது வீட்டின் உரிமையாளர் கத்தியால் வெட்டப்பட்டார். அதுகுறித்த விசாரணையில் திருவாரூர், நன்னிலம் முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்த கேசவன் (52) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் 2020இல் அம்மாபேட்டை பகுதியில், நடராஜன் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டவர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

Similar News

News September 17, 2025

திருவாரூர்: கீழவீதியில் விஜய் பிரச்சாரம்!

image

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 13ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வரும் செப்.,20-ம் தேதி சனிக்கிழமை திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக திருவாரூர் மாவட்ட காவல்துறையிடம் நேற்று தவெகவினர் மனு அளித்த நிலையில் இன்று காவல்துறை சார்பில் கீழ வீதி பகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

News September 16, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.16) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News September 16, 2025

திருவாரூர்: தொழில் முனைவோராக சூப்பர் வாய்ப்பு

image

திருவாரூர்..வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் UYEGP என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000-ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும், <>இங்கு கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். இதனை LIKE ஸ்செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க. நீங்களும் தொழிலதிபர் ஆகுங்க!

error: Content is protected !!