News October 2, 2024

கொலை வழக்கில் குற்ற வாளிக்கு ஆயுள் தண்டனை

image

சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். தனது தந்தையை காணவில்லை என 15.06.2019 அன்று சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் சீலையம்பட்டி அஜ்மல்கான் (40) மனைவிக்கும் வினோத் குமாருக்கும் தொடர்பு காரணமாக கருணாநிதியை ஊருக்கு வரவழைத்து கொலை செய்தது தெரிந்தது. வழக்கின் முடிவில் நேற்று(அக்.01) தேனி அமர்வு நீதிபதி கோபிநாத் அஜ்மல்கானுக்கு ஆயுள் தண்டனை வழங்கினார்.

Similar News

News July 7, 2025

நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க 50% மானியம்

image

தேனி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மூலம் நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க 10 பேருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில் ஒரு பயனாளிக்கு 4 வார வயதுள்ள 250 நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கப்படும். மொத்த தொகை ரூ.2,18,000. அதில் 50% மானியமாக அரசு ரூ. 1,09,000 வழங்கும். மீதி தொகையை பயனாளி செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தை அணுகலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணவும்.

News July 7, 2025

பெரியகுளம்: வழக்கறிஞரை தாக்கிய தம்பதி மீது வழக்கு

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் பாலு. இவரது தம்பிகளான அழகுராஜா, சங்கருக்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை ஏற்பட்டது. இதனை பாலு சமாதானம் செய்துள்ளார். இந்நிலையில் சங்கர் அவரது மனைவி சிந்தனைச்செல்வி சேர்ந்து வீட்டிலிருந்த பாலுவை அவதூறாக பேசி, கல்லால் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தென்கரை போலீசார் சங்கர், சிந்தனைச் செல்வி மீது நேற்று (ஜூலை.6) வழக்கு பதிவு

News July 7, 2025

போடியில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

image

போடியில் 5வது வார்டு திமுக சார்பில் 10வது மற்றும் 12ஆம் வகுப்பு பொதுதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டும் விழா திமுக போடி நகர் செயலாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட திமுக நகரச் செயலாளர் முதல் பரிசு 3000, 2ஆம் பரிசு 2000, 3ஆம் பரிசு 1000 வழங்கினார். மேலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு நோட்டுகள், பேனாக்கள், பென்சில் வழங்கப்பட்டது.

error: Content is protected !!