News March 7, 2025
கொலை முயற்சி வழக்கில் ரவுடி படப்பை குணா கைது

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா மீது கொலை, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் திருவள்ளூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. மதுராமங்கலம் அருகே விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக மோகன் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. புகாரின் பேரில், நேற்று (மார்.6) குணா போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News April 20, 2025
மீஞ்சூர்: வேலைக்கு வந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (54) கூலி தொழிலாளி. இவர் நேற்று மீஞ்சூர் அடுத்த வல்லூர் பகுதியில் கூலி வேலை செய்வதற்காக வந்தபோது, நெஞ்சு வலி இருப்பதாக படுத்திருந்த நிலையில் சிறிது நேரம் கழித்து சக பணியாளர்கள் வேலை செய்ய எழுப்பிய போது சத்தம் இல்லாததால் அவரை பரிசோதித்து பார்த்த போது ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News April 20, 2025
திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் எண்கள்

▶மாவட்ட திட்ட அலுவலர் – 044-27660421, ▶மாவட்ட கருவூல அலுவலர் – 044-27660888, ▶முதன்மைக் கல்வி அலுவலர் – 9384034214, ▶திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர், – 7373002993, ▶பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் – 7373002996, ▶திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் – 9445000412, ▶பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் – 9445000410, ▶திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் – 9445000411, ▶மாவட்ட சமூக நல அலுவலர் – 044-27663912.
News April 20, 2025
உருக்கு ஆலையில் தீப்பிழம்பு சிதறி தொழிலாளர் பலி

கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்துர்நத்தம் கிராமத்தில் உள்ள தனியார் உருக்கு ஆலையில், பீகாரைச் சேர்ந்த ராஜ்குமார் (28) ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். கடந்த 10ஆம் தேதி ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, தீப்பிழம்பு அவர் மீது சிதறி விபத்து ஏற்பட்டது. உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.