News May 4, 2024
கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு

போடி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் போடி புதூரைச் சோ்ந்த மது என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில், கொடுத்த கடனை திரும்பக் கேட்டு மது, முத்துப்பாண்டியை சாவியால் குத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதில், காயமடைந்த முத்துப்பாண்டி போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இது குறித்து போலீஸாா் மது மீது நேற்று (மே.3) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News November 5, 2025
தேனி, வீரபாண்டி மக்களுக்கு GOOD NEWS

தேனி, வீரபாண்டி, தேவாரம் உள்ளிட்ட துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளதால் மேற்கண்ட துணைமின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் மின்சாதம் இருக்காது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இன்று அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்படுவதாக்கவும், மின் விநியோகம் இருக்கும் எனவும் மின் வாரிய செயற்பொறியாளர் சண்முகா தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
வகுப்பறை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

தேனி மாவட்டம், மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.11.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
News November 4, 2025
சின்னமனூரில் மின்தடை ரத்து

நாளை (05.11.2025) பராமரிப்பு பணி காரணமாக 110 KV மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையங்களில் உள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால், மேற்கண்ட பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் இருக்கும் என மின்செயற்பொறியாளர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


