News September 27, 2024
கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. சொத்து தகராறு காரணமாக அவரை கடந்த 2019 ஆண்டு முத்தீஸ்வரன் என்பவர் வெட்டி கொலை செய்தார். அவரை உத்தமபாளையம் போலீசார் கைது செய்த நிலையில் இந்த வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக இன்று கொலை குற்றவாளி முத்தீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார்.
Similar News
News September 18, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 17.09.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News September 17, 2025
தேனி: பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500

தேனி மக்களே; 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11.10.2025 அன்று நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in இணையத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்பிக்கலாம். (தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்) SHARE IT.
News September 17, 2025
தேனி: 50% மானியத்தில் வாங்க மிஸ் பண்ணாதீங்க!

தேனி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க தொடர்புக்கு:04546-254368. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க.